96772 26656
கல்வி, சுகாதார மற்றும் சமூக நிலைமைகளை தற்கால நிலையினின்று மேம்படுத்தலும், உள்ளூர் மனித வள ஆற்றல் உதவியுடன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மக்களின் பொது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முயற்சித்தலுமாகும்.
மாணவர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி அவர்களின் கல்வித்திறனை மேம்படச்செய்தல் மற்றும் உள்ளூர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற ஆர்வலர்களுடன் இணைந்து மாணவர் திறனை மேலும் மேம்படுத்துதல்.
உள்ளூர் மனித ஆற்றலை பயன்படுத்தி சுகாதார, பொருளாதார, கலாச்சார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தகவல்களை சேகரித்தல் மற்றும் அவற்றை முறையாக வகைப்படுத்துதல்.
மக்களின் பொது நலம் மற்றும் நோய்ப்படும் நிலையை மதிப்பிடலும், அந்நோய் நிலைமையினின்று நீங்கி வாழ்க்கை மேம்படவும் உதவுதல்.
பின்தங்கிய மக்களின் சமூக நிலையை மதிப்பிடவும் அவர்களின் இயலாமைகளைக் கடக்கவும் மற்றும் சமுதாயத்தில் மதிப்புடனும் பயனுள்ளவகையிலும் வாழ உதவுதல்.
நலிந்துவரும் உள்ளூர் கலை, கைவினை மற்றும் முற்போக்கான பழக்க வழக்கங்கள் புத்துயிர் பெற்றிட பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வித்திடுதல்.
பெண்கள், மூத்தோர், நலிவடைந்தோரின் உள்ளூர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலும் சுற்றுச்சூழலுடன் ஒத்து வாழ உதவுதலும்.